Le Coq sportif நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு இழுத்த பிரெஞ்சு ரஃக்பி கழகம்!
19 புரட்டாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 3157
சப்பாத்துக்கள், சீருடைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யும் Le Coq sportif நிறுவனத்தை, பிரெஞ்சு ரஃக்பி கூட்டமைப்பு நீதிமன்றத்துக்கு இழுத்துள்ளது.
Fédération française de rugby கூட்டமைப்பு, பிரெஞ்சு ரஃக்பி அணிக்கான சீருடைகள், சப்பாத்துக்கள் தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒப்பந்தத்தை Le Coq sportif எனும் பிரெஞ்சு நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது. இதற்காக விளம்பரதார ஒப்பந்தம், காப்புரிமை பணம், மற்றும் தாமதமான பணத்துக்கான வட்டி என மொத்தமாக 5.3 மில்லியன் யூரோக்களை இழப்பீடாக கோரியுள்ளது.
2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான ஆறு வருடங்களுக்கான தொகையாக இந்த பணம் கோரப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் Fédération française de rugby இற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டபோது Le Coq sportif நிறுவனம் 4.6 மில்லியன் யூரோக்கள் செலுத்தவேண்டி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களில் Le Coq sportif நிறுவனம் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வருகிறது.
முன்னதாக 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை Adidas நிறுவனம் இந்த சீருடைகள், சப்பாத்துக்களை தயாரித்து வழங்கி வந்திருந்தது. பின்னர் அது ஒரு பிரெஞ்சு நிறுவனத்துக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டே ஒப்பந்தம் Le Coq sportif இற்கு வழங்கப்பட்டது.