ஹலோவீன் : மகிழுந்துகளை எரியூட்டிய மூவர் கைது!
1 கார்த்திகை 2024 வெள்ளி 07:23 | பார்வைகள் : 2142
நேற்றைய தினம் ஹலோவீன் பண்டிகை கொண்டாட்டத்தின் போது மகிழுந்துகளை தீவைத்து எரிந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கறுப்பு நிற உடையும், முகமூடியும் அணிந்துகொண்டு ‘ஹலோவீன்‘ கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மூவர், வீதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்துகள் மீது பெற்றோல் எறிகுண்டுகளை வீசி, அதனை எரியூட்டியுள்ளனர். அதனை தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
லியோன் நகருக்கு அருகே Rillieux-la-Pape எனும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணொளியை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், குறித்த மூவரையும் கைது செய்துள்ளனர்.