சமையல்காரராக மாறிய டிரம்ப் - வைரலாகும் காணொளி
21 ஐப்பசி 2024 திங்கள் 10:02 | பார்வைகள் : 408
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம் மக்களை கவர்வதற்காக சமையல்காரராக மாறிய காணொளி சமூக வலைத்தளங்களைல் வைரலாகி வருகின்றது. அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
அந்த வகையில் இந்தியாவில் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கையாளும் பார்முலாவை டிரம்ப் கையில் எடுத்துள்ளார். அதாவது, அமெரிக்க மக்களின் விருப்பத்துக்குரிய மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பிரென்ச் பிரைஸ் செய்துள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்றில் டிரம்ப், செஃப் உடை அணிந்து பிரென்ச் பிரைஸ் பொரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கமலா ஹாரிசை விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை கமலா ஹாரிஸ் தனது இளமைக்கால நடுதர வாழ்க்கை குறித்தும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணியாற்றியது குறித்தும் பிரகாரங்களில் சிலாகித்து வருவதால் அதை கிண்டலடிக்கும் வகையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூற்ப்படுகின்றது.