புதிய நிறங்களில் ipad miniயை அறிமுகம் செய்த ஆப்பிள்
22 ஐப்பசி 2024 செவ்வாய் 15:50 | பார்வைகள் : 710
ஆப்பிள் நிறுவனம் தனது iPad mini மொடலை அப்டேட் செய்துள்ளது.
iPad mini மொடல் புதிய நிறங்களில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய iPad mini மொடலில் A17 Pro Chipsetயில் Apple Intelligence வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மொடல் 128 GB, 256 GB மற்றும் 512 GB மெமரி Variantsயில் கிடைக்கிறது. இதில் 8.3 Inch Liquid Retina Display உள்ளது.
அதனுடன் இந்த Tablet மொடல் iPad os 18யில் செயல்படுகிறது. மேலும் 12mp Ultra wide செல்பி கமெரா, Retina Flash, Dual மைக்ரோபோன்கள், Strereo speakers வழங்கப்பட்டுள்ளன.
புதிய iPad mini மொடல் Sterlite, Space grey, Blue மற்றும் Purple நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் 128 GB மொடலின் விலை ரூ.49,900 ஆகும். 128 GB Wifi + செல்லுலார் மொடலின் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 256 GB மெமரி மொடலின் விலை ரூ.59,900 Wifi + செல்லுலார் மொடலின் விலை ரூ.74, 900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 512 GB Wifi மொடலின் விலை ரூ.79,900 என்றும், Wifi + செல்லுலார் மொடலின் விலை ரூ.94,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.