Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்?

இலங்கையில் வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்?

11 மார்கழி 2024 புதன் 09:18 | பார்வைகள் : 659


வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு பணிப்புரை கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் அலோக பண்டார தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் சேவை தேவைகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்