ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
29 கார்த்திகை 2024 வெள்ளி 12:48 | பார்வைகள் : 606
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் திரைத்துறை பற்றிய படிப்பை முடித்த நிலையில், அவர் ஹீரோவாக நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் அடிப்படையில், அவரது முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹீரோ தேடும் பணியில் இருந்த ஜேசன் சஞ்சய், இறுதியாக சந்தீப் கிஷானை ஹீரோவாக முடிவு செய்துள்ளார். இன்று வெளியான மோஷன் போஸ்டர் இதை உறுதி செய்துள்ளது.
சந்தீப் கிஷன் ஹீரோவாக, ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், தமன் இசையில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் என்று மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.