Paristamil Navigation Paristamil advert login

குளிர்காலத்தில் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ...!

குளிர்காலத்தில்  பாதாம் சாப்பிடுவதால்  கிடைக்கும்  நன்மைகள் ...!

29 கார்த்திகை 2024 வெள்ளி 15:26 | பார்வைகள் : 446


குளிர்காலத்தில் அனைவரும் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பாதாம் உடலில் ஆற்றலை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கைந்து பாதாம் சாப்பிட வேண்டும். இந்த பாதாமை ஊறவைத்தோ அல்லது ஊற வைக்காமலோ சாப்பிடலாம். பாதாமில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனுடன், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை இதில் உள்ளன, இவை நம் உடலுக்கு நன்மை தரும்.

மேலும், இதய கோளாறு உள்ளவர்கள் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது அதிக ஆற்றலை வழங்குவதுடன் இதயத்திற்கும் நல்லது. இதை தவிர்த்து, பாதாமை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக சாப்பிட முடியாத குழந்தைகளுககு பொடியாக இடித்து பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

பாதாம் பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. அதே சமயம் எலும்புகளும் வலுவடையும். பாவால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதனால் முடிந்தவரை இந்த குளிர்காலத்தில் பாதாம் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்