நோர்து-டேம் தேவாலயத்தை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மக்ரோன்!!!
29 கார்த்திகை 2024 வெள்ளி 15:24 | பார்வைகள் : 974
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் இன்றைய நாள் நோர்து-டேம் தேவாலத்தில் கழிந்தது. அதன் திறப்புவிழாவுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று காலை முதல் பிற்பகல் வரை தேவாலயத்தின் அனைத்து பகுதிகளையும் மக்ரோன் பார்வையிட்டார். அத்தோடு சிறிய உரையும் நிகழ்த்தினார்.
கூரை வேலைப்பாடுகளையும், சுவர் மற்றும் தரை வேலைப்பாடுகளையும் பார்வையிட்ட அவர், 'இதுபோன்ற ஒரு மிக நேர்த்தியான வேலைப்பாட்டினை நான் பார்த்ததே இல்லை!' என குறிப்பிட்டார்.
காலை 7 மணிக்கு முன்னதாகவே ஜனாதிபதி மக்ரோன் தனது துணைவியார் பிரிஜித் மக்ரோனுடன் தேவாயலத்துக்கு வருகை தந்து அதனை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தார்.
திருத்தப்பணிகளுக்காக நியமித்த நிறுவனத்தின் ஊழியர்களையும், அதன் தலைவரையும் சந்தித்து உரையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்படும் போது அவர் சில நிமிடங்கள் உரையாற்றினார்.