Paristamil Navigation Paristamil advert login

மஹிந்தவின் மனு மீதான விசாரணை - அறிவிக்க்பபட்ட திகதி

மஹிந்தவின் மனு மீதான விசாரணை - அறிவிக்க்பபட்ட திகதி

6 மாசி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 1933


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த மனு வியாழக்கிழமை (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே மேற்படி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்