லெபனான் தாக்குதலை நினைவுகூர்ந்த இஸ்ரேலிய பிரதமர்

6 மாசி 2025 வியாழன் 12:52 | பார்வைகள் : 2160
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-க்கு தங்க பேஜரை பரிசாக வழங்கியுள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு தங்க பேஜரை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிசாக வழங்கியுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்ட நடவடிக்கை நினைவு கூறும் விதமாக டிரம்பிற்கு இரண்டு பேஜர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு பேஜர்களில் ஒன்று வழக்கமான சாதாரண பேஜர் ஆகும், மற்றொன்று தங்க முலாம் பூசப்பட்ட தங்க பேஜர் ஆகும்.
இஸ்ரேலிய பிரதமரின் இந்த பரிசை ஏற்றுக் கொண்ட டிரம்ப் “ இது ஒரு சிறந்த நடவடிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய படைகளுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதலின் போது, கடந்த செப்டம்பர் 2024ம் ஆண்டு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயிரக்கணக்கான பேஜர்கள் திடீரென வெடித்து சிதறியது.
இதில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர், இதனை தொடர்ந்து சில நாட்களில் வாக்கி-டாக்கிகளும் வெடித்து பலரின் உயிரை பறித்தது குறிப்பிடத்தக்கது.