புதிய அவதாரம் எடுக்கும் ரவி மோகன்..

13 பங்குனி 2025 வியாழன் 11:50 | பார்வைகள் : 830
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் "பராசக்தி" என்ற திரைப்படத்தில், ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன், அவர் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படுவதால், திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் "ஜெயம்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய ரவி மோகன், அதன் பின்னர் பல வெற்றி படங்களை வழங்கி வந்துள்ளார். தற்போது, சிவகார்த்திகேயனுடன் "பராசக்தி" படத்தில் நடிப்பதோடு, "கராத்தே பாபு" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த 2 படங்களை முடித்த பின்னர், அவர் இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரின் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி என்டர்டெய்னர் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் ஜெயம் ரவி சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த வருட இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.