Paristamil Navigation Paristamil advert login

சத்தான ஓட்ஸ் சூப்

சத்தான ஓட்ஸ் சூப்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10009


 உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் ஓட்ஸ் மிகவும் அட்டகாசமான உணவுப் பொருள். இத்தகைய உணவுப் பொருளானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால் இதனை மழைக்காலத்தின் மாலை வேளையில் சூப் செய்தால், நிச்சயம் விரும்பி சாப்பிடுவோம். மேலும் இந்த ஓட்ஸ் சூப்பானது மாலையில் மட்டுமின்றி, காலையில் கூட செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.... 

 
தேவையான பொருட்கள்: 
 
ஓட்ஸ் - 1/4 கப் 
தண்ணீர் - 1/2 கப் 
பால் - 2 கப் 
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் 
கேரட் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 2 டீஸ்பூன் 
வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 சிட்டிகை 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். 
 
பின்னர் அதில் கேரட் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 
 
அப்போது ஓட்ஸில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், அதில் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, பின் தேவையான அளவு உப்பு, உலர்ந்த கற்பூரவள்ளி இலை, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், ஓட்ஸ் சூப் ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்