பரிஸ் : வீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு!

11 கார்த்திகை 2023 சனி 19:39 | பார்வைகள் : 16738
இளைஞன் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இந்த வாள் வெட்டு சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. மருத்துவக்குழுவுக்கு அதிகாலை 3.40 மணி அளவில் கிடைத்த தகவலை அடுத்து, boulevard de la Villette பகுதிக்கு அவர்கள் விரைந்து சென்றனனர். அங்கு வீதி ஒன்றின் அருகே, பாதசாரிகள் கடவையில் இளைஞன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிட்டப்பதை பார்த்து, உடனடியாக அவரை மீட்டனர்.
18 ஆம் வட்டாரத்தில் உள்ள Bichat மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்கானதாகவும், கழுத்து மற்றும் முதுகுப்பகுதிகளில் வெட்டுக்காயம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 19 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1