”யூத மக்கள் பயப்பிடும் பிரான்ஸ் - பிரான்சே இல்லை!” - ஜனாதிபதி மக்ரோன்!!
12 கார்த்திகை 2023 ஞாயிறு 11:00 | பார்வைகள் : 6010
இன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. யூத மக்களுக்கு ஆதரவாக இடம்பெற உள்ள இந்த பேரணியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த பேரணியில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்வார் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் அச்செய்தி உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரான்சில் வசிக்கும் யூத மக்கள் பயத்தோடு வாழ்ந்தால் அது பிரான்சே இல்லை எனவும், யூதர்கள் பயமின்றி வாழும் நாடே பிரான்ஸ் என்றாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,200 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரான்சில் இந்த ஒரு மாத காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூத எதிர்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.