Paristamil Navigation Paristamil advert login

பாட்ஷா ரீமேக்கில் அஜித்

பாட்ஷா ரீமேக்கில் அஜித்

12 கார்த்திகை 2023 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 7505


ரஜினியின் கேரியரில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் தான் நடித்ததில் மிகவும் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா தொடர்பு கொண்ட போது, ஒரு பாட்ஷாவே போதும், இரண்டாம் பாகம் வேண்டாம் என்று சொல்லி நடிப்பதற்கு மறுத்து விட்டார்.

இந்த நிலையில் பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த படத்தில் ஹீரோவாக விஜய்- அஜித் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பாட்ஷா ரீமேக்கில் நடிக்கப் போவது விஜய்யா? அஜித்தா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ரஜினியின் பில்லா என்ற கேங்ஸ்டர் படத்தில் நடித்தார் அஜித்குமார். அந்த ரீமேக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் பாட்ஷாவாக நடிப்பதற்கும் அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதனால் ரஜினியின் பில்லாவை தொடர்ந்து பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜித்குமாரே நடிப்பார் என்பது தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்