Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை

இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை

12 கார்த்திகை 2023 ஞாயிறு 11:55 | பார்வைகள் : 3513


சவுதி அரேபிய தலைநகரில் அரேபிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ஆகியோர் கலந்துகொண்ட உச்சிமாநாட்டில், காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் - ஹமாஸ் போரானது எஞ்சிய மத்திய கிழக்கு நாடுகளிலும் வியாபிக்க கூடிய அச்சம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த அதிரடி தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது

இதுவரை முன்னெடுத்த கொடூர தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 11,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்து குற்றச் செயல்களுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

காஸா பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதுதான் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் முதல் முறையாக வருகை தந்துள்ள ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூர நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் ஒருமனதாக அந்த நாட்டின் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலும் அதன் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவும் இதுவரை போர் நிறுத்தத்திற்கான கோரிக்கைகளை நிராகரித்துள்ளதற்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய தலைவர்களால் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்