பாஸ்போர்ட் வழங்குவதை முற்றாக நிறுத்திய பிரபல நாடு
12 கார்த்திகை 2023 ஞாயிறு 12:29 | பார்வைகள் : 4110
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக, புதிய பாஸ்போர்ட் வழங்குதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாஸ்போர்ட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் காகிதத்தை பாகிஸ்தான், பிரான்சில் இருந்து இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் பெற காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் வேலை அல்லது ஓய்வுக்காக பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் உட்பட பலர் தாமதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
அதேவேளை நிலைமை விரைவில் கட்டுக்குள் வரும் என அரசு உறுதி அளித்துள்ளது.
இதற்கிடையில், பெஷாவரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
3000 முதல் 4000 பாஸ்போர்ட்டுகளை வந்த நிலையில் தற்போது தினமும் 12 முதல் 13 பாஸ்போர்ட்களை மட்டுமே அச்சிட முடிகிறதாக கூறியுள்ளாராம்.
அதேவேளை , பாகிஸ்தானில் இதுபோன்ற நெருக்கடி ஏற்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த 2013 ஆம் ஆண்டில், அச்சுப்பொறிகள் மற்றும் லேமினேஷன் பேப்பர்களின் பற்றாக்குறை காரணமாக பாஸ்போர்ட் அச்சிடுதல் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.