Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு - தெமட்டகொட பகுதியில் வீட்டின் மீது குண்டு தாக்குதல்

கொழும்பு - தெமட்டகொட பகுதியில் வீட்டின் மீது குண்டு தாக்குதல்

12 கார்த்திகை 2023 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 4642


போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான தெமட்டகொட ருவானின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெமட்டகொட, வெலுவன பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன் வாயிலில் இரண்டு வெடிகுண்டுகளும் தோட்டத்தில் ஒரு வெடிகுண்டும் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தெமட்டகொட ருவன் தற்போது புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்