Paristamil Navigation Paristamil advert login

உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றி...? ரவி சாஸ்திரி கருத்து

உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றி...? ரவி சாஸ்திரி கருத்து

13 கார்த்திகை 2023 திங்கள் 07:54 | பார்வைகள் : 2339


நடப்பு உலக கோப்பை-யை இந்திய அணி கைப்பற்ற தவறினால் இன்னும் மூன்று உலக கோப்பை தொடர்கள் இந்திய அணி காத்திருக்க வேண்டி இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவை வைத்து நடைபெற்று வரும் நிலையில், இதன் லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நடப்பு உலக கோப்பை இந்திய அணி கைப்பற்ற தவறினால் இன்னும் 3 உலக கோப்பை தொடர்கள் இந்திய அணி காத்திருக்க வேண்டி இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருந்த கருத்தில் இந்திய அணியில் தற்போது உள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் உச்சக்கட்ட பார்மில் உள்ளனர்.

இது இந்திய அணி ஐசிசி பட்டத்தை வெல்வதற்கு கிடைத்த சிறப்பான வாய்ப்பு.


இந்திய அணி உலக கோப்பை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது, எனவே உலக கோப்பை வெல்ல இது சரியாத தருணம், இதனை நாம் தவறவிட்டு விட்டால் அடுத்த 3 உலக கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.

அணியின் சிறந்த பார்மில் உள்ள வீரர்கள் சிலருக்கு இது கடைசி உலக கோப்பையாக கூட இருக்கலாம், அவர்கள் இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளனர், எனவே இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் போதும் கோப்பையை நமது கைகளில் ஏந்தி விடலாம்.

பேட்ஸ்மேன்களை போல பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்