தெற்காசியாவில் தண்ணீர் பற்றாக்குறை - ஐ.நா. தகவல்
13 கார்த்திகை 2023 திங்கள் 15:00 | பார்வைகள் : 3546
காலநிலை மாற்றம் காரணமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
அதிகமான சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக ஐ.நா சபை இன்று 13 ஆம் திகதி நவம்பர் தெரிவித்துள்ளது.
உலகின் மற்ற பிராந்தியங்களை விடவும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் சிறுவர்கள் அதிக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளம், வறட்சி, மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் காரணமாக தெற்காசியாவில் மில்லியன்கணக்கான சிறுவர்கள் குடிப்பதற்கு போதுமான நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் துபாயில் நடைபெற்ற UN COP28 காலநிலை மாநாட்டில் 'வாழும் கிரகத்தை பாதுகாக்க' எனும் தொனிப்பொருளில் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பு (யுனிசெப் - UNICEF) தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், "பாதுகாப்பான நீரானது மனிதனின் அடிப்படை உரிமையாகும்" என தெற்காசியாவுக்கான யுனிசெப் அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகர தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஆண்டு மற்ற பிராந்தியங்களை விடவும் தெற்காசிய பிராந்தியத்தில் 45 மில்லியன் சிறுவர்கள் குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினர்.
எனினும், தொடர்ச்சியாக நிலவும் இந்த நீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் யுனிசெப் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதன் விளைவாக, 2030ஆம் ஆண்டுக்குள் நீர் பற்றாக்குறை பிரச்சினை பாதியாக குறைந்துவிடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தென்னாபிரிக்காவில் 130 மில்லியன் சிறுவர்கள் மோசமான தண்ணீர் பற்றாக்குறையால் ஆபத்தை நோக்கிய நிலையில் உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.