பிரான்ஸ் அதிகமான "antibiotiques" நுண்ணுயிர் எதிர்ப்புக்கான மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.
13 கார்த்திகை 2023 திங்கள் 18:11 | பார்வைகள் : 5906
பிரான்சில் வாழும் மக்கள் "antibiotiques" எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புக்கான மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 2021ம் ஆண்டு முதல் இந்த அதிகரிப்பு அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
ஒருவர் உடலில் ஏற்படும் நோய்களுக்கு எல்லாம் "antibiotiques" எனும் நோயெதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், உடலில் இயற்கையாகவே இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி தன் செயல்பாடுகளை இழந்து, உடல் அடிக்கடி தொற்று நோய்களுக்கு ஆளாகக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு குறிப்பாக 5 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்களிடம் 40% சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வரும் டிசம்பர் மாதம் "antibiotiques" பாவனைக்கு எதிரான அல்லது அதன் தாக்கங்கள் குறித்த பிரச்சாரத்தை சுகாதார அதிகாரிகள் ஆரம்பிக்கவுள்ளனர் எனவும் தெரியவருகிறது.