Paristamil Navigation Paristamil advert login

காசா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் சுரங்கம்!

காசா மருத்துவமனைக்கு அடியில்  ஹமாஸ் சுரங்கம்!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 08:55 | பார்வைகள் : 8027


இஸ்ரேல் படை ஹமாஸ் அமைப்பை வேரோடு அழிப்பதே நமது கொள்ளை என்ற அடிப்படையில் ஈவு இரக்கம் இன்றி போர் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் ஹமாஸ் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுடன் ஹமாஸ் படையினர் காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் பதுங்கியிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

டெல் அவிவ் நகரில் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களிடம் பேசிய போது சில புகைப்பட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரன்தீஸி மருத்துவமனையை சோதனையிட்ட போது அங்கு ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த மருத்துவமனையின் அடித்தளத்தில் தற்கொலைப் படையினருக்கான ஆயுதங்கள் வெடிகுண்டுகள், மற்றும் ஏகே.47 ரக துப்பாக்கிகள் போன்றவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களும் கிடைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால் தற்போது ஒவ்வொரு மருத்துவமனையாக சோதனையிட்டு நோயாளிகளைப் பாதுகாத்து வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்