Paristamil Navigation Paristamil advert login

ஒரு ஆபத்தான நிலை. பிரான்சில் வறுமை மோசமடைந்து வருகிறது. "Secours catholique"

ஒரு ஆபத்தான நிலை. பிரான்சில் வறுமை மோசமடைந்து வருகிறது.

14 கார்த்திகை 2023 செவ்வாய் 09:38 | பார்வைகள் : 3513


கத்தோலிக்க திருச்சபையின் பெரும் தொண்டு நிறுவனம் "Secours catholique" இன, மத, நிற,மொழி, தேசியம் போன்ற வேறுபாடுகள் அற்று, வீடு அற்றவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், வதிவிடம் அனுமதி இல்லாதவர்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என யார் தங்களின் கதவைத் தட்டினாலும் தம்மால் முடிந்த உதவிகளை செய்வதுடன், அவர்களின் தேவைகளுக்கான வழிகாட்டுதல்களையும் 'Secours catholique' தன் பணியாக செய்து வருகிறது.

ஆண்டுதோறும் பல ஆய்வுகளை மேற்கொண்டு ,பிரான்சில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது எனும் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து வருகிறது.
அந்த வரிசையில் இவ்வாண்டுக்கான அவர்களின் ஆய்வறிக்கை நேற்றையதினம் வெளியாகியுள்ளது.

அதன்படி ஒரு ஆபத்தான நிலை பிரான்சில் உருவாகியுள்ளது ,வறுமை நிலை குடும்பங்களில் மோசமடைந்து வருகிறது. என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  தங்களிடம் இவ்வாண்டு உதவி கேட்டு வந்த 49 250 குடும்பங்களின் மாத வருமானம் 538 யூரோக்கள். ஒரு குடும்பம் நாள் ஒன்றுக்கு 18 யூரோக்களை செலவு செய்கிறது இது மிகவும் வறுமை நிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களின் வறுமை காரணமாக மணமுறிவுகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது, இதனால் பெண்களும், குழந்தைகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு இந்த நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும், வறுமையில் வாழும் மக்களுக்கு அரசு வழங்கும் RSA போன்ற உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் எனவும் "Secours catholique" தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்