கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிவைக்க முத்திரை தேவையில்லை, முகவரி தேவை. "La Poste"
14 கார்த்திகை 2023 செவ்வாய் 09:39 | பார்வைகள் : 4013
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவை நினைவு கூர்ந்து கொண்டாடுவது பாரம்பரிய மகிழ்ச்சி நிகழ்வாகும். கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்கள் கொண்டு வருவார் என நம்புவதும், எதிர்பார்ப்பதும், பெற்றோர்களே தங்கள் வாங்கிய கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை கிறிஸ்துமஸ் தாத்தா தந்ததாக சொல்லுவதும் குழந்தைகள் உலகின் அழகிய விடையம்.
கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பரிசுப் பொருட்கள் கேட்டும், வாழ்த்துகள் கூறியும் இந்த காலப்பகுதியில் குழந்தைகள் கடிதங்கள் எழுதும் நீண்ட கால நிகழ்வாகும். அந்த கடிதங்களுக்கு முத்திரைகள் இல்லாத சேவையை 1962ம் ஆண்டு முதல் பிரான்சின் தபால் போக்குவரத்து சேவையான 'La Poste' செய்துவருகிறது. அதேபோல் இவ்வாண்டு இன்றுமுதல் வரும் டிசம்பர் 20 திகதி வரை தமது இலவச சேவை தொடரும் என இன்று அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு குழந்தைகள் கடிதம் அனுப்பும் போது அனுப்பும் முகவரிக்கு பதிலாக "கிறிஸ்துமஸ் தாத்தா" என்று மட்டுமே எழுதினால் போதும், அனால் கிறிஸ்துமஸ் தாத்தா பதில் அனுப்புவதற்கு அனுப்பும் குழந்தையின் முகவரி முக்கியம் என 'La Poste" தெரிவித்துள்ளது.