Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மண் சரிவில்  சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்பு

இலங்கையில் மண் சரிவில்  சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்பு

14 கார்த்திகை 2023 செவ்வாய் 14:55 | பார்வைகள் : 4079


பலாங்கொடையில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் வரை பாதுகாப்புப் படையினர் மற்றும் அனர்த்த நிலையத்தின் மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட நடவடிக்கையின் பின்னரே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த மண் சரவு ஏற்பட்ட நிலையில் இன்று வரை குடும்பத்தினர் தேடப்பட்டு வந்தனர்.

வீட்டில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு மகள்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்கள் 45, 40 வயது (தாய் மற்றும் தந்தை) மற்றும் 10 மற்றும் 16 வயதுடைய அவர்களது இரண்டு மகள்கள் என தெரியவந்துள்ளது.

இந்த மண் மேடு சரிந்ததால், அருகில் உள்ள மூன்று வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன், அதில் சிக்கியிருந்த முதியவரை நேற்று பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

தற்போதும் அந்த பகுதியில் சாரல் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்