பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷக்களே காரணம்: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

14 கார்த்திகை 2023 செவ்வாய் 15:05 | பார்வைகள் : 6241
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பி.பி.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுமீதான விசாரணை இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1