Paristamil Navigation Paristamil advert login

வெள்ள பாதிப்பு : Nord, Pas-de-Calais மாவட்டங்களுக்கு €50 மில்லியன் யூரோக்கள் உதவி! - ஜனாதிபதி அறிவிப்பு!!

வெள்ள பாதிப்பு : Nord, Pas-de-Calais  மாவட்டங்களுக்கு €50 மில்லியன் யூரோக்கள் உதவி! - ஜனாதிபதி அறிவிப்பு!!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 17:31 | பார்வைகள் : 2715


Nord, Pas-de-Calais மாவட்டங்கள் கடந்த ஒருவாரமாக வெள்ளத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இன்று எட்டாவது நாளாக அங்கு மழை வெள்ளம் காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Pas-de-Calais மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு வைத்து, 214 Pas-de-Calais நகராட்சிகளையும், 30 Nord நகராட்சிகளையும் 'இயற்கை இடர் பகுதிகளாக' (catastrophe naturelle) அறிவித்தார். மேலும் அங்கு ஏற்பட்ட இடர்களை சீர்செய்ய €50 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்படுவதாக மேலும் அறிவித்தார்.

வெள்ளத்தினால் 5,000 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும், பல விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்