Paristamil Navigation Paristamil advert login

Pas-de-Calais மாவட்டத்துக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!

Pas-de-Calais மாவட்டத்துக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!!

14 கார்த்திகை 2023 செவ்வாய் 18:38 | பார்வைகள் : 6661


கடும் மழை மற்றும் வெள்ள எச்சரிக்கை காரணமாக Pas-de-Calais மாவட்டத்துக்கு மீண்டும்  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பா-து-கலே தவிர்த்து Nord, Vosges,  Doubs, Jura, Ain, Rhône,  Haute-Savoie, Savoie ,  Isère ,  Charente-Maritime , Vendée ஆகிய  11 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 26 நாட்களில் பிரான்சில் 215.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. முன்னதாக 1993 ஆம் ஆண்டில் இதே நாட்களில் 196.9 மி.மீ மழை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்