2050 ஆம் ஆண்டுக்குள் கடும் வெப்பம் - நிபுணர்கள் எச்சரிக்கை
15 கார்த்திகை 2023 புதன் 12:50 | பார்வைகள் : 3486
பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மனித குலத்தின் ஆரோக்கியம் பெரும் ஆபத்தாக மாறும் என சர்வதேச நிபுணர்கள் குழு புதன்கிழமை எச்சரித்துள்ளது.
தி லான்செட் கவுண்ட்டவுன், முன்னணி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் வருடாந்திர மதிப்பீட்டின்படி,
உலகில் தொடர்ந்து அதிகரித்து வரும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் பல வழிகளில் கொடிய வெப்பமும் ஒன்றாகும்.
வழக்கமான வறட்சியால் மில்லியன் கணக்கான மக்களை பட்டினியான நிலமைக்கு கொண்டு செல்லும் எனவும்,
கொசுக்கள் முன்பை விட அதிகமாக பரவும் மற்றும் சுகாதார அமைப்புகள் சமாளிக்க போராடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு மனித வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆய்வாளர்கள் இந்த ஆபத்தான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள வானிலை ஆய்வாளர்கள், ஒக்டோபர் மாதம் தான் இந்த ஆண்டு பதிவான வெப்பமான மாதம் என்று அறிவித்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் துபாயில் நடக்கும் COP28 காலநிலை பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்க முயல்வதால், டிசம்பர் 3 ஆம் திகதி முதல் முறையாக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
லான்செட் கவுண்ட்டவுன் அறிக்கையின்படி, உலகளாவிய நடவடிக்கைக்கான அழைப்புகள் அதிகரித்து வரும் போதிலும், கார்பன் உமிழ்வு கடந்த ஆண்டு புதிய உச்சத்தை கண்டுள்ளது.