Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் அமைப்பின் கட்டளைப்பீடம் கண்டுப்பிடிப்பு - அமெரிக்கா தகவல்

ஹமாஸ் அமைப்பின்  கட்டளைப்பீடம் கண்டுப்பிடிப்பு - அமெரிக்கா தகவல்

15 கார்த்திகை 2023 புதன் 13:07 | பார்வைகள் : 3191


காசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ், அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ், காசா மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் இந்த தகவலை ஹமாஸ்  அமைப்பு நிராகரித்துள்ளது.

அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன அவை இதனை உறுதி செய்கின்றன என குறிப்பிட்டுள்ள கிர்பி ,

ஹமாசும், ஸ்லாமிக் ஜிகாத்தும் மருத்துவமனைக்கு கீழே உள்ள சுரங்கப்பாதைகளில் ஆயுதங்களையும் பணயக்கைதிகளையும் மறைத்துவைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹமாஸ் உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துள்ளதால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சவாலானது எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்