Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டவர்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு - பொதுமக்கள் ஆதரவு!!

வெளிநாட்டவர்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு - பொதுமக்கள் ஆதரவு!!

16 கார்த்திகை 2023 வியாழன் 10:35 | பார்வைகள் : 4642


பிரான்சில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட பத்தில் ஏழு பேர் அல்லது 67% சதவீதமானவர்கள் இந்த ஆதரவை வெளியிட்டுள்ளனர். பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஒற்றுமைகான வருமானம் (le Revenu de solidarité active -RSA),வயது வந்த உடலூனமுற்றவர்களுக்கான கொடுப்பனவு (l’Allocation aux adultes handicapés -AAH), முதியோருக்கான கொடுப்பனவு (l’Allocation spécifique aux personnes âgées -Aspa) மற்றும் குறிப்பிட்ட சில விஷேட கொடுப்பனவுகள் (l'Allocation spécifique de solidarité -ASS) போன்ற கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு பொதுமக்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

“வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டுமா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் (Oui) என 67% சதவீதமானவர்களும், இல்லை (Non) என 32% சதவீதமானவர்களும், கருத்துக்கள் இல்லை (NSP) என 1% சதவீதமானவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.



இந்த கருத்துக்கணிப்பை CNews ஊடகத்துக்காக l’institut CSA நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

(நன்றி : CNews)

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்