பிரான்சில் அதிகரித்துச் செல்லும் நீரிழிவு நோயாளிகள் தொகை. எப்படி குறைப்பது?
16 கார்த்திகை 2023 வியாழன் 11:10 | பார்வைகள் : 3876
சர்க்கரையால் வகைப்படுத்தப்படும் நீரிழிவு நோய் பிரான்சில் நான்கு மில்லியனாக உயர்ந்துள்ளது. இது பிரான்ஸ் மக்கள் தொகையில் 6% சதவீதம் ஆகும். குறித்த தொகை தமக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என கண்டறிந்தவர்களின் தொகையாகும்.
இன்னும் தம்மை பரிசோதிக்காமல் பிரான்சில் சுமார் ஐந்து லட்சம் பேர் முதல் எட்டு லட்சம் பேர் வரை வாழ்கிறார்கள். என்பதே உண்மையாகும். நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும் ஒன்று குழந்தை பருவத்தில் ஏற்படும், இதற்கு தொடர்ச்சியாக இன்சுலின் ஏற்றவேண்டும், இரண்டாவது வயதான பின்னர் ஏற்படுவது. இவை பெரும்பாலும் உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை, உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது.
முதல் வகை நீரிழிவு நோய் தவிர்க்க முடியாது, இரண்டாவது வகை நீரிழிவு நோய் வராமல் இருக்கவும், வந்தபின் எதிர்த்து போராடவும் முடியும். வெறும் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தால் போதும் என பிரான்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.