இன்று பிரான்சில் 'fête de Beaujolais' வைனுக்கு திருவிழா .
16 கார்த்திகை 2023 வியாழன் 11:11 | பார்வைகள் : 2914
ஓவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை 'faites de Beaujolais' வைன் திருவிழா பிரான்சில் கொண்டாடப்படுகிறது.
1937ல் இருந்து குறித்த வைன் திருவிழா அறிமுகமானது, சாதரணமாக வைன் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் பெறுமதி அதிகரிக்கும், ஆனால் Beaujolais வைன் மட்டும் அந்த ஆண்டே தயாரிக்கப்பட்டு அந்த ஆண்டே விற்பனை செய்யப்படும்.
Beaujolais வைன் தமயாரிப்பு நிலையங்களில் தயாரிக்கப்பட்டு மிகப் பாதுகாப்பாக வைக்கப்படும். நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை நல்லிரவுக்கு பின்னரே கடைகளுக்கும், அருந்தகங்கள், உணவகங்களுக்கும் (bar, restaurant) வினியோகிக்கப்படும். மறுநாள் வியாழக்கிழமை மதுப் பிரியர்களுக்கு வழங்கப்படும்.
Beaujolais வைன் அருந்துவதற்கு மட்டும் அன்றி உணவு தயாரிக்கவும் பயன்படுத்தப்படும், சிவப்பு நிறத்திலான Beaujolais வைன் அதிகம் பரிமாறப்பட்டாலும், வெள்ளை நிற Beaujolais வைன்களும் உண்டு.