Paristamil Navigation Paristamil advert login

சியரான் புயலின் பாதிப்பு - இரண்டு வாரங்களாகத் தொடரும் மின்தடை!!

சியரான் புயலின் பாதிப்பு - இரண்டு வாரங்களாகத் தொடரும் மின்தடை!!

16 கார்த்திகை 2023 வியாழன் 17:51 | பார்வைகள் : 6466


இரண்டு வாரங்களிற்கு முன்னர் பிரான்சினைத் தாக்கிய சியரான் புயலின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்து வருகின்றது.

இந்தப் புயலினால் பாதிக்கப்பட்ட 3000 வீடுகளிற்கு இன்னமும் மின்தடை தொடர்கின்றது.

மின்சார வழங்கல் வலையமைப்பான எனெடிஸ் இன் நேற்றைய கணகெடுப்பின்படி பிரெத்தோன் மாநிலத்தில் 3.000 வீடுகளிற்கு இரண்டுவாரங்கள் தாண்டியும் இன்னமும் மினதடை தொடர்கின்றது எனத் தெரிவித்துள்ளது.

முக்கியமாக இவற்றில் பல குக்கிராமங்கள் என்றும், மற்றையவை தனித்தனி வீடுகள் என்றும், புற்காற்றின் தேசத்தினால் வீதிகள் துண்டிக்கப்பட்டு, அங்கு செல்வது கடினமாக உள்ளதென்றும், தொடர்ச்சியான மோசமான காலநிலை  மின்சாரம் மீள் வழங்க பெரும் இடையூராக உள்ளதென்றும் எனெடிஸ் தெரிவித்துள்ளது.

தங்களின் பெருமுயற்சியால் இன்னமும் ஓரிரு நாட்களில் அனைத்து வீடுகளிற்கும் மின்சாரம் மீள் வழங்கப்படும் எனவும் எனெடிஸ் உறுதியளித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்