ஒரு ஆணின் 'actes de barbarie' காட்டுமிராண்டி தனமான செயலுக்கு பின்னர் 3 மாதங்கள் கழித்து வீடு திரும்பினாள் Mégane.

16 கார்த்திகை 2023 வியாழன் 18:45 | பார்வைகள் : 18406
Cherbourg பகுதியில் வாழ்ந்து வந்தவள் 29 வயதான Mégane. கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி அவளின் வீட்டில் வைத்து, ஏற்கனவே பார்த்திருந்த ஆனால் பழக்கம் இல்லாத 18 வயதான இளைஞனால். அடித்தும், உதைத்தும் மிக மோசமாக 'actes de barbarie' ஒரு காட்டுமிராண்டி தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.
மிகுந்த வலிகளோடு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட Mégane பலநாட்கள் கோமா நிலையில் இருந்தாள், சிகிச்சை பலனளிக்குமா? மீண்டும் மீண்டு வருவாளா? என்று தெரியாத நிலை.
இதற்குள் காவல்துறை ஆகஸ்ட் 10ம் திகதி அதே பகுதியில் வாழும் 18 வயது இளைஞனை அவரின் தாயாரின் வீட்டில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை நடத்துகிறது. முதலில் முரண்டு பிடித்த இளைஞன், பின்னர் உண்மைகளை ஒப்புக்கொள்ள, நீதிமன்றம் 'பாலியல் பலாத்காரம், காட்டுமிராண்டி தனமான தாக்குதல் போன்ற குற்றங்கள் புரிந்தவர்' என இளைஞனை Caen சிறையில் அடைக்கிறது.
வலிகளோடு, மன உளைச்சலோடு, மூன்று மாதங்கள், Cherbourg பகுதியில் உள்ள 'hôpital Louis-Pasteur' மருத்துவ மனையில் போராடிய Mégane இன்று வீடுதிரும்பியுள்ளாள்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1