பெற்றோர்களில் ஒருவரை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கு - சிறப்பு கிரிஸ்மஸ் கொடுப்பனவு!!

17 கார்த்திகை 2023 வெள்ளி 11:11 | பார்வைகள் : 11719
பெற்றோர்களில் ஒருவரை மட்டும் தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
₤115 யூரோக்களில் இருந்து அதிகபட்சமாக ₤200 யூரோக்கள் வரை வழங்கப்படும் எனவும், மொத்தமாக 600,000 குடும்பங்கள் இந்த கொடுப்பனவை பெற ஏற்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆதரவு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்போது மேற்படி கொடுப்பனவுகளை வழங்க பெரும்பன்மை ஆதரவு வாக்குகள் பதிவாகின.
இதற்காக மொத்தமாக ₤70 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1