Paristamil Navigation Paristamil advert login

'Black friday' யும் பிரஞ்சு மக்களும், இளையோரும்.

'Black friday' யும் பிரஞ்சு மக்களும், இளையோரும்.

17 கார்த்திகை 2023 வெள்ளி 11:57 | பார்வைகள் : 5509


ஆண்டின் நவம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 'Black Friday' எனும் தலைப்பில் விலைகுறைப்பு வியாபாரம் நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான 'Black Friday' எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 25) தொடங்கவுள்ளது.

அமெரிக்காவில் பிறந்த இந்த வணிக நிகழ்வு, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் மண்ணுக்கு இறக்குமதி ஆனது. பெரும் பொருளாதார, வாழ்வாதார சிக்கலில் சிக்கியுள்ள பிரான்ஸ் நாட்டவர்களும்,  அவர்களில் இளையோரும் இந்த வணிக நிகழ்வை எப்படி பார்க்கிறார்கள் எனும் ஒரு கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. வாழ்க்கை நிலைமைகளின் ஆய்வு மற்றும் அவதானிப்புக்கான ஆராய்ச்சி மையம் 'Crédoc' குறித்த கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டவரில் இளையோர் 'Black Friday'  எனும் வணிக நிகழ்வை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்கிறார்கள், தங்களுக்கு தேவையான விலையுயர்ந்த ஆடைகள், தொழில்நுட்ப சாதனங்கள், போன்ற பொருட்களை 'Black Friday' வணிக நிகழ்வில் மலிவாக கொள்வனவு செய்வதே அவர்களின் நோக்கம்.  காரணம் அதிக விளம்பரங்கள் அவர்களை நோக்கியே செய்யப்படுகிறது. ஆனால் அவர்கள் பெரும்பாலும் இணையதள வழியாகவே தங்கள் கொள்வனவை செய்ய விரும்புகின்றனர்.

ஏனைய பிரான்ஸ் நாட்டவர்கள் 'Black Friday' அறிமுகமான காலப்பகுதியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர், காலம் செல்லச் செல்ல இது ஒரு வேண்டாத பணச் செலவை ஏற்படுத்தும் வணிக விளம்பர நிகழ்வு என்றும் மலிவு விலை என்பதால் தேவைக்கு அதிகமான பெருட்களை வாங்க வைக்கும் தந்திரம் என்றும் கூறி 85% சதவீதமானவர்கள் வெறுக்கின்றனர். இருப்பினும் ஒரு சுற்று கடைகளுக்கு செல்லவும் வரும்புகின்றனர. என வாழ்க்கை நிலைமைகளின் ஆய்வு மற்றும் அவதானிப்புக்கான ஆராய்ச்சி மையம் 'Crédoc' அதன் ஆய்வறிக்கையில்  தெரிவித்துள்ளது

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்