Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி

18 கார்த்திகை 2023 சனி 09:43 | பார்வைகள் : 6017


அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மனநல மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த நபரின் கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த போது சுமார் 185 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்