காசா மருத்துவமனை தொடர்பில் இஸ்ரேலின் அதிரடி உத்தரவு
18 கார்த்திகை 2023 சனி 11:05 | பார்வைகள் : 4068
காசாவிலுள்ள மருத்துவமனை ஒன்றை அடுத்த ஒரு மணி நேரத்தில் காலி செய்யுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காசாவில் அமைந்துள்ள Al Quds மருத்துவமனையை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் காலி செய்யுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் படைகள், மருத்துவமனையின் இயக்குநரான Mohammed Abu Salmiya என்பவரை அழைத்து, நோயாளிகள், காயமடைந்தவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வெளியேற்றுவதை உறுதிசெய்யுமாறு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மருத்துவமனையிலிருக்கும் அனைவரும் வெளியேறி, கடலை நோக்கி நடந்தே செல்லவேண்டும் என்றும் இஸ்ரேல் படைகள் உத்தரவிட்டுள்ளன.
அதாவது, இரண்டு நாட்களுக்கு முன், ஹமாஸ் குழுவினர் அந்த மருத்துவமனையில் பதுங்கியுள்ளார்களா என்பதை அறிவதற்காக, இஸ்ரேல் படைகள் மருத்துவமனையை சோதனையிட்டன.
அப்போது, மருத்துவமனைக்குள், ஹமாஸ் குழுவினர் மறைந்திருக்கும் சுரங்கப்பாதையின் நுழைவாயில் ஒன்றையும், ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒன்றையும் கண்டு பிடித்துள்ளனர்.
அங்கு ராணுவ ஆபரேஷன் ஒன்று நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் படையினர், அதற்காகவே, மருத்துவமனையிலிருப்போரை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக கருதப்படுகிறது.