பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர்கள்! - உள்துறை அமைச்சர் தகவல்!!

18 கார்த்திகை 2023 சனி 19:00 | பார்வைகள் : 9615
இன்று வெள்ளிக்கிழமை பிரான்சில் இருந்து 15 வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
24 தொடக்கம் 51 வயது வரையுள்ள 15 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். Metz, Vincennes, Mesnil-Amelot மற்றும் Nîmes உள்ளிட்ட நகரங்களில் வசித்த அவர்கள், நாட்டு அச்சுறுத்தலாக அமைவார்கள் என தெரிவிக்கப்பட்டு நாடு கடத்தப்படுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள் கொண்டு நடமாடுவது, கொள்ளையில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் 20 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.