Paristamil Navigation Paristamil advert login

மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஐந்தாண்டு நிறைவு! - பரிசில் ஆர்ப்பாட்டம்!

மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஐந்தாண்டு நிறைவு! - பரிசில் ஆர்ப்பாட்டம்!

19 கார்த்திகை 2023 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 7746


மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று சனிக்கிழமை பரிசில் மீண்டும் அவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். 

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து “gilets jaunes” எனும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. பரிசில் ஆரம்பமான இந்த போராட்டம் நாளடைவில்  பிரான்ஸ் முழுவதும் பரவியது. போராட்டக்காரர்கள் மஞ்சள் மேலங்கியை அணிந்து வீதிகளை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் மிகத் தீவிரமாக இந்த போராட்டம் இடம்பெற்றது. காவல்துறையினர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றது. 

 

பின்னர் படிப்படியாக இந்த போராட்டங்கள் தேய்வடைந்தன. தற்போது ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், நேற்று அதனை நினைவு கூரும் விதமாக பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் 450 பேர் வரை கலந்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்