காசா மருத்துவமனையில் பரிதவிக்கும் நோயாளிகள் ! அதிர்ச்சி தகவல்
19 கார்த்திகை 2023 ஞாயிறு 09:32 | பார்வைகள் : 2763
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை கண்டறிந்து இஸ்ரேலிய ராணுவ படை அழித்து வருகிறது.
இதற்கிடையில் காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய ராணுவம் அங்குள்ள அல் ஷிபா மருத்துவமனையை உடனடியாக காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனால் அந்த மருத்துவமனையில் இருந்து கிட்டத்தட்ட 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு,
அல் ஷிபா மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 291 பேர் உயிருக்கு ஆபத்தான முறையில் தவித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதில் பல நோயாளிகள் தீவிரக் காயங்கள், முதுகுத் தண்டுவட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும், சுகாதாரப் பணியாளர்களும் தெரிவித்த விவரங்கள் தங்களை நிலைகுலைய வைத்து இருப்பதாக ஐ.நா குழு தெரிவித்துள்ளது.
அல் ஷிபா மருத்துவமனை பகுதி மரணப் பகுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.