வினாடிக்கு 150 HD திரைப்படங்கள் வரை பரிமாற்றம்! உலகின் அதிவேக இணையம் இந்த நாட்டில் அறிமுகம்!
19 கார்த்திகை 2023 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 2536
உலகின் அதிவேக இணையத்தை சீன நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த இணையத்தின்மூலம், வினாடிக்கு 1.2 டெராபிட்கள் (வினாடிக்கு 1200 GB) தரவு பரிமாற்றம் செய்ய முடியும் என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
சுருக்கமாக, இது ஒரு வினாடிக்கு 150 HD திரைப்படங்கள் வரை மாற்ற முடியும் என்று Huawei Technologies-ன் துணைத் தலைவர் வாங் லீ கூறுகிறார்.
சிங்குவா பல்கலைக்கழகம், சைனா மொபைல், ஹுவாய் டெக்னாலஜிஸ் மற்றும் செர்னெட் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நெட்வொர்க் 3000 கிமீ நீளம் கொண்டது. இது பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சோவை இணைக்கும் நெட்வொர்க் ஆகும். இந்த ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க் மூலம் ஒரு நொடிக்கு 1.2 டெராபிட்கள் வரை தரவுகளை அனுப்ப முடியும்.
இன்றைய வேகமான நெட்வொர்க்குகள் அதிகபட்ச வேகம் வினாடிக்கு 100 ஜிபி மட்டுமே.
நெட்வொர்க் இந்த ஆண்டு ஜூலை மாதம் செயல்பாட்டுக்கு வந்தது, ஆனால் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு திங்களன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
Beijing-Wuhan-Guangzhou நெட்வொர்க் சீனாவின் எதிர்கால இணைய தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.