காஸாவில் காயமடைந்த சிறுவர்களை வரவேற்க தயார்! - ஜனாதிபதி மக்ரோன்!!
19 கார்த்திகை 2023 ஞாயிறு 17:05 | பார்வைகள் : 3510
காஸா பகுதியில் காயமடைந்த 50 சிறுவர்களை ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் தயாராக உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்து இன்றோடு 44 நாட்கள் ஆகின்றன. இந்த யுத்தத்தினை நிறுத்த பிரான்ஸ் தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் ஒன்று திரட்டுகிறது. காஸாவில் உள்ள யுத்தத்தினால் காயமடைந்த சிறுவர்களை அவசியம் ஏற்பட்டால் பிரான்சுக்கு அழைத்து வர தயாராக இருப்பதாக மக்ரோன் தெரிவித்தார். அவர்களுக்கு பிரான்சின் சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, அடுத்த வாரத்தில் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் ஒன்றை காஸா கடற்பகுதிக்கு பிரான்ஸ் அனுப்ப உள்ளது. மருத்துவ உதவிகள் அனைத்தையும் வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளதாகவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.