Paristamil Navigation Paristamil advert login

தண்டவாளத்துக்கு அருகே சடலம் மீட்பு! - போக்குவரத்து பாதிப்பு!!

தண்டவாளத்துக்கு அருகே சடலம் மீட்பு! - போக்குவரத்து பாதிப்பு!!

19 கார்த்திகை 2023 ஞாயிறு 17:39 | பார்வைகள் : 3435


தண்டவாளம் அருகே இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டதை அடுத்து RER A தொடருந்து சேவை பாதிக்கப்பட்டது. இன்று நண்பகலில் இருந்து தடைப்பட்ட குறித்த சேவை சற்று முன்னர் வழமைக்குத் திரும்பியுள்ளது.

Noisy-le-Grand மற்றும் Vincennes நிலையங்களுக்கிடையே உள்ள தண்டவாளத்தில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. Vincennes மற்றும் Noisy-le-Grand Mont d'Est நிலையங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டது.

போக்குவரத்து மாலை 5 மணியின் பின்னர் படிப்படியாக சீரடைந்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. போக்குவரத்து தடைப்பட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை வழங்கப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்