Paristamil Navigation Paristamil advert login

காஸாவுக்குச் செல்லும் பிரெஞ்சு போர்க்கப்பல்!

காஸாவுக்குச் செல்லும் பிரெஞ்சு போர்க்கப்பல்!

19 கார்த்திகை 2023 ஞாயிறு 18:10 | பார்வைகள் : 3742


பிரான்சுக்கு சொந்தமான Dixmude எனும் போர்க்கப்பல் ஒன்று காஸாவுக்கு செல்ல உள்ளது. ஏராளமான மருத்துவப்பொருட்களுடன் இந்த போர்க்கப்பல் காஸாவின் கிழக்கு மத்திய தரைக்கடலில் தரித்து நிற்க உள்ளது.

Dixmude எனும் போர்க்கப்பல் ஆனது உலங்குவானூர்த்தியினை தரையிறக்கப் பயன்படும் கப்பலாகும். பிரான்சில் இருந்து பத்து தொன் எடைக்கும் அதிகமான மருத்துப்பொருட்களுடன் புறப்பட்ட இந்த கப்பல் தற்போது எகிப்த்துக்கு சொந்தமான கடற்பகுதியில் உள்ளது. அடுத்து வரும் நாட்களில் அது காஸா கடற்பிராந்தியத்தைச் சென்றடைந்துவிடும்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஞாயிற்றுக்கிழமை கட்டார் மன்னர் Sheikh Tamim bin Hamad Al-Thani உடனும், எகிப்த்திய ஜனாதிபதி Abdel Fattah al-Sisi உடனும் தொலைபேசி வழியாக உரையாடியிருந்தார். ஹமாஸ் அமைப்பினர் சிறைப்பிடித்துள்ள எட்டு பிரெஞ்சு மக்கள் உட்பட அனைத்து பிணையக்கைதிகளையும் விடுவிப்பது தொடர்பில் அவர்களிடம் வலியுறுத்தினார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் எகிப்த் மத்திஸ்தனம் வகித்து வருகிறது. அதையத்தே மக்ரோன் அவர்களிடம் உரையாடியிருந்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்