காசாவில் போர் நிறுத்தம் - கனடாவில் மீண்டும் போராட்டங்களில் ஈடுப்படும் மக்கள்
20 கார்த்திகை 2023 திங்கள் 08:26 | பார்வைகள் : 2965
இஸ்ரேல் நாடானது ஹமாஸ் தீவிர சாத அமைப்புக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவை சேர்ந்த பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் என பல நாடுகளில் போர் நிறுத்த கோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தத்தை கோரி கனடாவில் மீண்டும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
வான்கூவாரில் பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடிய அரசாங்கம் மனித உரிமைகள் விவகாரங்களில் கூடுதல் முன்னுரிமை எடுத்துக்கொள்ள வேண்டுமென பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காசாவில் மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே காசா பிராந்தியத்தில் உடன் அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .