பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி இஸ்ரேலுக்கு விடுத்துள்ள எச்சரிகை
20 கார்த்திகை 2023 திங்கள் 09:26 | பார்வைகள் : 3272
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்பில் பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி ரியாத் அல் மாலிக் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது, எச்சரிக்கை தகவல் ஒன்று விடுத்துள்ளார்.
குறித்த உரையாற்றிலின் போது, "நிர்வாகிகள் இன்றைய உரையை முடிப்பதற்குள் 60 குழந்தைகள் உள்பட 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருப்பர்.
கடந்த இரு வாரங்களில் மட்டும் 5,700-க்கும் அதிக பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 2,300-க்கும் அதிகமானோர் குழந்தைகள், 1300-க்கும் அதிகமானோர் பெண்கள்." ஆவார்.
"அதிகளவு அநீதி மற்றும் கொலை இஸ்ரேலை பாதுகாப்பாக மாற்றிவிடாது.
ஆயுதங்கள் மற்றும் கூட்டணிகளின் எண்ணிக்கை அவர்களுக்கு பாதுகாப்பை அளித்துவிடாது.
அமைதி மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.
பாலஸ்தீனர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் அமைதியாக இருப்பது மட்டுமே பாதுகாப்பை அளிக்கும்."
"இதனை அடைவதற்கு ஒரே வழி, காசா எல்லையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேலின் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது மட்டும் தான்.
அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டால் அவற்றை மனிதாபிமான உதவிகளால் சரி செய்துவிட முடியாது. காசாவில் உள்ள எங்களது மக்களின் மீது அழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று தெரிவித்துள்ளார்.