நஹேல் கொலை : விடுவிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
20 கார்த்திகை 2023 திங்கள் 11:18 | பார்வைகள் : 3590
நஹேல் எனும் இளைஞன் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகியிருந்தார். துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,, கடந்த வாரம் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று Nanterre நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை நஹேலின் தாயார் ஏற்பாடு செய்திருந்தார். இதில் 500 பேர் பேர் வரை பங்கேற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நஹேலின் மரணத்துக்கு நீதி கேட்டும், காவல்துறையி வீரர் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்தும் போராட்டக்குழுவினர் கோஷமெழுப்பினர்.
கடந்த ஜூன் 27 ஆம் திகதி Nanterre நகரில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி மகிழுந்தில் பயணித்த 17 வயதுடைய நஹேல் காவல்துறையினரால் சுடப்பட்டிருந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் நஹேல் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களை நெருங்கும் இச்சம்பவத்தை கண்டித்தே நேற்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.