Paristamil Navigation Paristamil advert login

நான்கு படங்களை தயாரிக்கும் அட்லி

நான்கு படங்களை தயாரிக்கும் அட்லி

20 கார்த்திகை 2023 திங்கள் 12:37 | பார்வைகள் : 6103


இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’ஜவான்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் அட்லி, விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். மேலும் ரஜினிக்கும் ஒரு திரைக்கதை வைத்திருப்பதாகவும் அது பாட்ஷாவை விட அசத்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அஜித்துக்காகவும் ஒரு கதை வைத்திருப்பதாகவும் அவர் ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்பை தொடங்க தயார் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் நான்கு திரைப்படங்களை தனது தயாரிப்பில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அட்லி கூறியுள்ளார். அவற்றில் ஒரு ஹிந்தி படம் என்றும் அதில் வருண் தேவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் தெரிவித்த அட்லி, இரண்டு தமிழ் படங்களையும் ஒரு தெலுங்கு படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்

மேற்கண்ட நான்கு படங்களும் தனது ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்